குமாரபுரம் தொடக்கப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

குமாரபுரம்  தொடக்கப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X

குமாரபுரம் தொடக்கப்பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்.

காவல்கிணறு அருகிலுள்ள குமாரபுரம் தொடக்கப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபுரம் தொடக்கப்பள்ளியில் கடந்த 1994ல் பயின்ற முப்பது முன்னாள் மாணவ, மாணவியர் தற்போது 28 ஆண்டுகள் கடந்த நிலையில் தங்களின் பழைய நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி பாடம் நடத்திய வகுப்பு ஆசிரியை அதிசயமணியை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினர்.

பின்னர் தாங்கள் பயின்ற வகுப்பு மற்றும் விளையாடிய மைதானம் போன்றவற்றினை சுற்றி வந்து ஒவ்வொருவரும் தங்களது இளமைக்கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு பசுமை நினைவுகளோடு அனைவரும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர் வைகுண்ட ராஜா செய்திருந்தார்.

Tags

Next Story
smart agriculture iot ai