ஆ. ராசா வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆ. ராசா வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
X

சங்கரன்கோவிலில் திமுகவின் ஆ. ராசா வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தாயாரையும் தர குறைவாக விமர்சித்ததாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ராசாவை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ, முத்துச்செல்வி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்டாலின் மற்றும் ராசாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்