சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்திற்கு குப்பையை கொட்டி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் கடந்த சில நாட்களாக நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியினை சரிவர மேற்கொள்வதில்லை என்றும், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கழிவு நீர் கால்வாயில் இருந்து அதன் கழிவுகள் எடுக்கப்படுகின்றது . அதன் பின் அது முறையாக அந்த குப்பைகள் அள்ளப்பட்டு வண்டியில் ஏற்றி செல்வதில்லை.
கடந்த ஓராண்டு காலமாக கழிவு நீர் கால்வாய்கள் ஒழுங்குகாக சுத்தம் செய்யப்படாமலும் ஆங்காங்கே குப்பைகள் தேக்கம் அடைந்து வருகின்றது. மேலும் சங்கரன்கோவில் வார்டு பகுதிகளில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் முழுவதாக முடிவடையாமல் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக கிடக்கின்றன மோட்டார் வாகனத்தில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாக சூழ்நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. நாங்கள் நகராட்சி மன்றத்திற்கு மக்கள் பிரச்சனையை பலமுறை எடுத்துக் கூறியும் இவர்கள் அதை சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில்லை. தாமிரபரணி ,கோட்டமலை ஆறு, மானுர், கூட்டு குடிநீர் திட்டம் இவை மூன்றும் ஒரு நாளைக்கு 55 லட்சம் லிட்டர் தண்ணீர் இப்பகுதியில் தேவைப்படுகின்றது. இதனை முறையான அளவீடு செய்து சரி செய்து தரும்படி நகராட்சி ஆணையாளரிடம் கூறப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu