சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு

சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு
X

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் மோப்ப நாய் ரிக்கி.

சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை என்பவரது மகன் இளங்கோ.

இவர் சென்னையில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த வந்த நிலையில் நேற்று இரவு பலபத்திராமபுரம் குளக்கரையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டு உள்ளார்.

இச்சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரிக்கி மற்றும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளி யார் என்பதை தேடி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஊத்துமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!