சங்கரன்கோவில் தொகுதியின் 3 ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்

சங்கரன்கோவில் தொகுதியின் 3 ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்
X

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், அதிமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சங்கரன்கோவில் 3 ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவினர் ஆரவாரத்துடன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் ஒன்றியத்தில் நயினார், அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குருவிகுளம் ஒன்றியத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் வாசுதேவன் தலைமையில் இளையரசனேந்தல் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஐஸ்வர்யா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், அதிமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!