புளியங்குடியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

புளியங்குடியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
X

புளியங்குடியில் நடைபெற்ற அதிமுக நகர்மன்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புளியங்குடியில் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புளியங்குடியில் நடைபெற்ற அதிமுக நகர்மன்ற வேட்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

புளியங்குடி நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் புளியங்குடியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

கழக இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான A.மனோகரன், மாவட்ட மருத்துவ அணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.துரையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்குடி நகர கழக செயலாளர் SDR.பரமேஷ்வர பாண்டியன் வரவேற்புரை வழங்கினார்.

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் S.சிவஆனந்த், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் U.S.வெங்கடேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சங்கரபாண்டியன், தலைமைக் கழக பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன், கழக நிர்வாகிகள் அருண்மொழி, டாக்டர்.திலீபன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியகலா தீபக் உட்பட கழக வேட்பாளர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!