சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அதிமுக நிர்வாகி மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அதிமுக நிர்வாகி மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
X

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அதிமுக நிர்வாகி பிரமுகர் மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் வழங்கினார்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அதிமுக நிர்வாகி பிரமுகர் மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் வழங்கினார்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அதிமுகவை சேர்ந்த பிரமுகர் மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் அவர்கள் தனது சொந்த செலவில் ஈசிஜி கருவி மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படும் வகையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அதிமுகவை சேர்ந்த பிரமுகர் Dr.திலீபன் ஜெய்சங்கர் சுமார் 1.1/2 லட்சம் மதிப்பீட்டில் தனது சொந்த செலவில் ஈசிஜி கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி மேலும் சானிடைசர் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு செந்தில் சேகர் அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்டக் கழகப் பொருளாளர் சண்முகையா மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், நகர அம்மா பேரவை செயலாளர் சௌந்தர் என்ற சாகுல் ஹமீது மற்றும் அதிமுக பிரமுகர் ஆட்கொண்டார் குளம் சந்திரன் தீக்கனல் லெட்சுமணன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்