சங்கரன்கோவில் அருகே விவசாயி வெட்டிப் படுகொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சங்கரன்கோவில் அருகே விவசாய படுகொலை செய்யப்பட்ட இடத்தில் பாேலீசார் விசாரணை.
சங்கரன்கோவில் அருகே விவசாய தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்கள். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேட்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமலைசாமி(60) என்பவர் புளியங்குடி பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம், ஆடு மாடுகள் வைத்தும் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது மாந்தோப்பு தோட்டத்தில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர்.
வழக்கம்போல் தனது தந்தைக்கு உணவு கொண்டு வரும் வேலையில் மரத்தடியில் தனது தந்தை இரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு இருந்ததைக் கண்ட அவருடைய மகன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்தும் சொத்து தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு உள்ள ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu