சங்கரநாராயண சுவாமி கோவிலில் தீபத்தை புறக்கணித்த நிர்வாகம்: பக்தர்கள் வேதனை

சங்கரநாராயண சுவாமி கோவிலில் தீபத்தை புறக்கணித்த நிர்வாகம்: பக்தர்கள் வேதனை
X

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் தீபத்தை புறக்கணித்த கோவில் நிர்வாகம் பக்தர்கள் வேதனை.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் தீபத்தை புறக்கணித்த கோவில் நிர்வாகம் பக்தர்கள் வேதனை.

கார்த்திகைத் தீப திருநாளன்று பொதுவாகவே தமிழகம் முழுவதும் இருக்கும் கோயில்களில் தீபங்களால் அலங்கரித்து வைத்து சொக்கப்பனை எனும் மகா தீபமும் ஏற்றப்பட்டு பக்தர்கள் சூழ தீபத்திருநாள் கொண்டாடுவது வழக்கம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் வழக்கத்தை போல இந்த ஆண்டும் தீபத் திருவிழா நடத்தி சொக்கப்பனை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்களும் ஐயப்ப சேவா சங்கம், ஹிந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஒட்டுமொத்த பக்தர்களின் கோரிக்கைக்கும் செவிசாய்க்காமல் சங்கரன்கோவிலில் இன்று திருக்கோவிலின் முகப்பு பகுதியில் ஒரு தீபம் கூட ஏற்றபடாமல் தீபத்தை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது கோவில் நிர்வாகம். தீபம் ஏற்ற வரும் பக்தர்கள் கூட வழக்குப்பதிவுக்கு பயந்து தீபம் ஏற்றாமல் தரிசனம் மட்டும் செய்து திரும்பிச் சென்றனர்.

சங்கரன் கோவிலில் முகப்புப் பகுதியில் முற்றிலுமாக தீபத்தைப் புறக்கணித்த கோவில் நிர்வாகம் மீது சங்கரன்கோவில் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Tags

Next Story