சங்கரன்கோவில் ஆடி தபசு திருவிழா: அதிமுக சார்பில் அன்னதானம்

சங்கரன்கோவில் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் சங்கரநாரயாணர் சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் பத்தாயிரம் பேருக்கு பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதனை அதிமுக நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மருத்துவர் திலிபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயாணர் கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவதையொட்டி சங்கரநாரயணர் கோமதிஅம்பாளுக்கு காட்சிகொடுக்கு நிகழ்ச்சியை காண உள்ளூர், வெளியூர்,வெளிமாவட்டங்கள் உட்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்..
இந்நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அதிமுக நகர்மன்றத்துணை தலைவர் கண்ணன், மருத்துவர் திலிபன் தலைமையில் பத்தாயிரம் பேருக்கு பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, லெமன், வெஜ்பிரியானி, குடிதண்ணீர் பாட்டில் ஆகிவற்றினை வழங்கினார்.
இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர்மன்ற உறுப்பினர் ராமர், முத்துலட்சுமி, மாரிச்சாமி, சந்திரசேகர், பரமசிவன், ராஜேஸ்வரி, ஆகியோருடன் சந்திரன், லட்சுமனண், கார்த்திக், கபில், மணிகண்டன், உள்ளிட்ட அதிமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ஏரளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஆடித்தபசு விழாவை காண வரும் பக்தர்களுக்கு ஏதுவாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சுரண்டை - சங்கரன்கோவில்
சுரண்டை, புளியங்குடியில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கோவிந்தப்பேரி தெப்பத்தின் அருகில் நிறுத்தப்படுகிறது.
தென்காசி-கோவில்பட்டி
தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் வழியாக கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரயில்வேபீடா் சாலை வழியாக பயணியா் விடுதி வந்து கருவூலம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வரும். பிறகு அங்கிருந்து ஐந்து வீட்டு லயன் வழியாக கீதாலயா தியேட்டா் சாலை, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக கோவில்பட்டி செல்ல வேண்டும்
கோவில்பட்டி-தென்காசி
கோவில்பட்டி, சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் வரும் பேருந்துகள் அனைத்தும் திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் முன்பு நிறுத்தப்படும். அங்கிருந்து தென்காசி செல்லும் பேருந்துகள் திருவேங்கடம் சாலை, கீதாலயா தியேட்டா் சாலை, ஐந்துவீட்டுமனை வழியாக ரயில்வேபீடா்சாலை, ரயில்வே கேட் வழியாக சென்று தென்காசி செல்லவேண்டும்.
100 சிறப்பு பேருந்துகள்
ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி சங்கரன்கோவிலில் இருந்து சுமாா் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து பணிமனை மேலாளா் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu