தென்காசி மாவட்டத்தில் நடந்த விபத்தில் தந்தை- மகன் உள்பட மூவர் காயம்

தென்காசி மாவட்டத்தில் நடந்த விபத்தில் தந்தை- மகன் உள்பட மூவர் காயம்
X
தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை- மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (60). இவரது மகன் ஆனந்தராஜ் (12) பள்ளி மாணவன். சிவராஜ், அவரது மகன் ஆனந்தராஜ் இருவரும் கரிவலம்வந்தநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ரெட்டிய பட்டியை சேர்ந்த சஞ்சீவி ராஜ் மகன் வினோத்குமார் (29) ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் பள்ளி மாணவன் ஆனந்தராஜ், அவரது தந்தை சிவராஜ், வினோத்குமார் ஆகிய மூவரும் காயமடைந்தனர். பின்னர் மூவரும் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!