சங்கரன்கோவிலில் விதிமுறைகளை மீறிய ஏசி பாருக்கு சீல்: கலால் துறையினர் அதிரடி

சங்கரன்கோவிலில் விதிமுறைகளை மீறிய ஏசி பாருக்கு சீல்: கலால் துறையினர் அதிரடி
X

சீல் வைக்கப்பட்ட தனியார் ஏசி பார்.

சங்கரன்கோவிலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் ஏசி பாருக்கு சீல் வைத்து கலால் வரித் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புளியங்குடி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ராயல் ஸ்போர்ட்ஸ் வெல்பர் கிளப் என்ற பெயரில் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பார் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாலும் பலமுறை மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கலால் வரித் துறையை சேர்ந்த கோட்ட மேலாளர் மகாலட்சுமி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கூறி தனியாருக்கு சொந்தமான பாருக்கு சீல் வைத்தனர்.

புகாரின்பேரில் காவல் துறையினர் பாரின் உரிமையாளர் அதன் மேலாளர் சந்துரு உள்ளிட்ட மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல வருடங்களாக விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த பார்-க்கு சீல் வைத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai and future cities