தென்காசி மாவட்டத்தில் ஆடி தபசு விழா
சங்கரன்கோவிலில் ஆடி தபசு நடைபெற்றது
சங்கரன்கோவில் ஆடித் தபசு பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்னகத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் உள்ளது இத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த கோவிலில் முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை சங்கன்- பதுமன் என்ற இரு பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரே என்று காட்சி அளிக்க வேண்டி இந்த திருத்தலத்தில் உள்ள கோமதி அம்பாள் ஒற்றை காலில் தவசு இருந்தார்.
அம்பாளின் வேண்டு கோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலது புறத்தை சிவனாகவும், இடது புறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இந்த அரிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21 ஆம் தேதி கோமதி அம்மன் சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதணை நடத்தப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் சுவாமி- கோமதி அம்பாளுக்கு வபூஜையும், தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்த சங்கரநாராயணசுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்மாளுக்கு தபசு காட்சி அளித்த வைபவம் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. விழாவை காண தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும் மண்டக படிதார்களும் செய்திருந்தனர் மேலும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சங் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெற்ற தபசு விழாவில் தென்காசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu