புளியங்குடியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சோலார் விளக்கை திருடி சென்றவர் கைது

புளியங்குடியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சோலார் விளக்கை திருடி சென்றவர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆனந்த்.

புளியங்குடியில் 50 ஆயிரம் மதிப்புள்ள சோலார் விளக்கை திருடி சென்றவர் கைது.

புளியங்குடியில் 50 ஆயிரம் மதிப்புள்ள சோலார் விளக்கை திருடி சென்றவர் கைது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் அரசுக்கு சொந்தமான சோலார் விளக்கை காணவில்லை என புகார் வந்தது புகாரினை பெற்றுக்கொண்ட புளியங்குடி காவல்துறை விசாரணை தொடங்கியது. அப்பகுதியில் உள்ள CCTV கேரோ பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் டிராக்டரில் திருடி சென்றது தெரியவந்தது.

இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரை பிடித்து விசாரித்தபோது இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு அப் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான சோலார் விளக்கை தனது டிராக்டர் மூலம் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். தனது செங்கல் சூளையில் அதனை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததையடுத்து, புளியங்குடி காவல்துறையினர் செங்கல்சூளை சென்று சோதனையிட்டனர்.

அப்போது சிந்தாமணியில் இருந்து திருடிய சோலார் விளக்கு மற்றும் பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆனந்தை சிவகிரி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அங்கு அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
why is ai important to the future