/* */

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண் வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது

கரிவலம் வந்த நல்லூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது.

HIGHLIGHTS

கரிவலம்வந்தநல்லூர் அருகே பெண் வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது
X

கரிவலம் வந்த நல்லூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி கனிமொழி (30). கனிமொழி சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரை கரிவலம் வந்த நல்லூர் அருகே உள்ள சிவஞான புரத்தை சேர்ந்த கருப்பன் மகன் வீமராஜா (38)என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீமராஜாவை கைது செய்தனர்.

Updated On: 21 Dec 2021 12:00 PM GMT

Related News