4 வயது சிறுவன் 'இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெற்று சாதனை

சங்கரன்கோவிலில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற 4 வயது சிறுவன் சாய் தர்ஷித்.
சங்கரன்கோவிலில் 4 வயது சிறுவன் படங்களை பார்த்து அதன் பெயர்களை கூறி வரும் திறமையால் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சிறுவனுக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல்-உமாமகேஸ்வரி தம்பதியினரின் மகன் 4 வயது மகன் LKG பயிலும் சாய் தர்ஷித் என்ற சிறுவனின் திறமையை பாராட்டி கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் விருதுகள் வழங்கியுள்ளது.
அந்த வகையில் சிறுவன் உலக நாடுகளின் கொடிகளை காட்டினால் அந்த நாடுகளின் பெயர்களை உடனடியாக சொல்லும் திறமை பெற்றது மட்டும் இல்லாமல் சாலை விதிகளில் உள்ள அறிகுறிகள் மற்றும் உலக அதிசயங்கள் மற்றும் கார் லோகோக்கள் ஆகியவற்றின் படங்களை பார்த்து பெயர்களை உடனடியாக சொல்லுமளவுக்கு உள்ள சிறுவனின் திறமையை கண்டும் மேலும் உலக வரைபடத்தில் அனைத்து நாடுகளின் கொடிகளை சரியான இடத்தில் பொருத்தும் திறமையை கண்டு வியந்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய இரு நிறுவனங்கள் சிறுவனுக்கு விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu