சங்கரன்கோவில் தனியார் மையத்தில் 9 அடி பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் தனியார் மையத்தில் 9 அடி பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

ஒன்பது அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடிக்கும் தீயணைப்புத்துறையினர். 

சங்கரன்கோவிலில் தனியார் பயிற்சி மையத்தில் பதுங்கியிருந்த ஒன்பது அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் இரயில்வே பீடர் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயிற்சி மையத்தில் உள்ள மோடாரில் ஒன்பது அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் கொண்டு லாவகமாக கையில் பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பை பத்திரமாக ஒரு பையில் அடைக்கப்பட்டு சங்கரன்கோவில் அருகே உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று தீயணைப்புத்துறையினர் விட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!