சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசிய 4 பேர் அதிரடி கைது

சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசிய 4 பேர் அதிரடி கைது
X

பைல் படம்.

சங்கரன்கோவில் அருகே சார்பு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை சாலையில், சார்பு ஆய்வாளர் கல்யாண சுந்தரம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அபே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அதிலிருந்த 4 பேரும் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதுகுறித்து சார்பு ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சண்முக வடிவு விசாரணை மேற்கொண்டு மேற்படி சிதம்பராபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் காளிராஜ்(42), மணலூரை சேர்ந்த கனியப்பன் என்பதில் மகன் சிவமுருகன் (36), சங்கரன்கோவிலை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் சக்திவேல் (26) மற்றும் புளியங்குடியைச் சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் சங்கரநாராயணன் (25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 8,600 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பணம் ரூ.11,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!