தாெடரும் குட்கா வேட்டையில் 3 நபர்கள் கைது: காவல் கண்காணிப்பாளர் அதிரடி

தாெடரும் குட்கா வேட்டையில் 3 நபர்கள் கைது: காவல் கண்காணிப்பாளர் அதிரடி
X

தென்காசியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த மூன்று நபர்கள் கைது.

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி, இரண்டாம் நாளாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது.

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி, இரண்டாம் நாளாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் நாளாக நேற்று KV நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் KV நல்லூர் நாடார் தெருவை சேர்ந்த மாரிமுத்து கனி (43) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 17,730 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாரிமுத்து கனி(43), குருநாதன்(58) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் KV நல்லூர் பம்பு தெருவை சேர்ந்த குருசாமி(40) என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 11,790 மதிப்பிலான குட்கா பொருட்களை சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் கைப்பற்றி குருசாமி(40), குருநாதன்(58) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குருநாதன்(58) என்பவர் இரு வழக்கிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொடர் அதிரடி நடவடிக்கையின் மூலம் தென்காசி மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself