சங்கரன்கோவில் அருகே மான்களை வேட்டையாடிய 3 பேர் கைது: வனத்துறை அதிரடி

சங்கரன்கோவில் அருகே மான்களை வேட்டையாடிய 3 பேர் கைது: வனத்துறை அதிரடி
X

மான்களை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட மூவர்.

சங்கரன்கோவில் அருகே மூன்று மாதங்களாக மான்களை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள ராசிங்கப்பேரி காட்டுப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக சிவகிரி வனச்சரகர் சுரேஷ் ரகசிய தகவல் கிடைத்தது.

தகவிலின் பேரில் மாறுவேடத்தில் சென்ற சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், அங்கு சென்று பார்த்தபோது மூன்று மான்கள் உட்பட ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் கறியை பங்கு போட்டுக் கொண்டிருந்த இராஜபாளையத்தைச் சேர்ந்த மதன்ராஜ்(23)இ மகேஷ்(19)இ குருவையா(42) ஆகிய மூன்று பேரை சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தனிப்படை அமைத்து சிவகிரி வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததலில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தளிக்கவும் அதன் இறைச்சியை விற்பணை செய்வதற்காகவும் மான் மற்றும் காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து வேட்டைக்குப் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் சிவகிரி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்ட உதவி வனபாதுகாவலர் நவாஸ் நேரில் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா