கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 274 மனுக்கள் ஏற்பு; 2 மனுக்கள் தள்ளுபடி

கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 274 மனுக்கள் ஏற்பு; 2 மனுக்கள் தள்ளுபடி
X

கோவில்பட்டி நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதுல்ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 274 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகத்தில் வரும் 19ம்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 276 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் அதிகாரி ராஜாராம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரிகள் ரமேஷ், மணிகண்டன், பிரதானபாபு, நாராயணன் ஆகியோர் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தனர். இதற்காக வேட்பாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர வைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டு வாரியாக அழைக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

மொத்தம் உள்ள 276 மனுக்களில் 9வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாரீஸ்வரி, 11வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கணேசன் ஆகியோரின் மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 274 மனுக்களும் ஏற்கப்பட்டன.

இதற்கிடையில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதுல்ஆனந்த், நகர தேர்தல் பார்வையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

அப்போது அவர்கள் தேர்தலை நேர்மையாகவும், அமைதியான முறையில் நடத்தவும் கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் அதிகாரி ராஜாராம், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, உதவி தேர்தல் அதிகாரிகள் ரமேஷ், மணிகண்டன், பிரதானபாபு, நாராயணன், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு