புளியங்குடி பகுதியில் 2 நாட்களாக தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

புளியங்குடி பகுதியில் 2 நாட்களாக தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோட்டைமலையாற்றில் குறைந்த நீர்வரத்து.

புளியங்குடி பகுதியில் இரண்டு நாட்களாக மழை பெய்யாததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பல்வேறு கோட்டைமலைலையாறு உட்பட அப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்;வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள குளங்களில் அனைத்தும் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து பெய்து வந்த மழையினால் தென்னை, பனை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு நெல்வயல்கள் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து குளம் போல் கட்சியளித்தது.

இதனை தொடர்ந்து நேற்றிலிந்து தற்போது வரை மழை இல்லாததல் கோட்டைமலையாற்றில் நீர்வரத்து குறைந்து நெல் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் அனைத்தும் வடிந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil