சங்கரன்கோவில் ஊராட்சியில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

சங்கரன்கோவில் ஊராட்சியில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 12 இடங்களை திமுக பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை பெறுகிறது. சுயேச்சை வேட்பாளர்களாக மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக ஒரு இடத்திலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று சங்கரன் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 1வது வார்டு சமுத்திரம், 3-வது வார்டு முத்துக்குமார், நாலாவது வார்டு சண்முகசுந்தரி, ஆறாவது வார்டு பார்வதி, ஏழாவது வார்டு தமிழ்ச்செல்வி, ஒன்பதாவது வார்டு செல்வி, 10-ஆவது வார்டு பரமகுரு, 11வது வார்டு ராமலட்சுமி, 12வது வார்டு சங்கரபாண்டியன், 13வது வார்டு முனியம்மாள், 15வது வார்டு ராமர், 17வது வார்டு வேலு தாய் ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்.

இரண்டாவது வார்டு தங்கச் செல்வி, 5-ஆவது வார்டு அமுதா, 16வது வார்டு கணேச புஷ்பா ஆகியோர் சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் 8வது வார்டு காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மேனகா சாந்தி 14 வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Tags

Next Story