சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்து 5 பேர் காயம்.

சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.

சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்து 5 பேர் காயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பந்தப்புளி கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இன்று 5 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகின்றன.

இந்த வெறி நாய்களால் கிராம மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று பந்தப்புளியை சேர்ந்த பிச்சை பாண்டி ( 30 ) , மூக்கம்மாள் (50) , சங்கர் குரு (38 ) , சின்னம்மாள் ( 40) குருவன் , ஆகியோர்களை வெறி நாய்கள் கடித்து காயப்படுத்தின..

காயமடைந்தவர்கள் ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். வெறி நாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future