ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 நபர்கள் கைது

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 நபர்கள் கைது
X

அச்சம்பட்டியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனையூரை சேர்ந்தவர் மாரிசாமி. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் அவரது ஆட்டோவில் அச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் மாரிசாமியை வழிமறித்து இந்த வழியாக இனி நீ வரக்கூடாது என அவதூறாக பேசி கைகளால் தாக்கியுள்ளனர்.

மீண்டும் இந்த வழியாக வந்தால் உன்னை எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து மாரிசாமி சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அச்சம்பட்டியை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் செல்வகுமார் மற்றும் வேலுசாமி என்பவரின் மகன் மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்