சங்கரன்கோவில் : சொத்து தகராறில் கல்லால் அடித்து ஒருவர் கொலை

சங்கரன்கோவில் : சொத்து தகராறில் கல்லால் அடித்து ஒருவர் கொலை
X
சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் கல்லால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவருக்கு மாடத்தி (முதல் மனைவி), நாச்சியர் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் மாடத்தி ராமர் பாண்டி தம்பதியினருக்கு பண்ணையார் (எ) அழகிய நம்பி என்ற மகனும் சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். சொத்து தகராறு காரணமாக பலவருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ராமர் பாண்டியன் அவரது சொத்தை இரண்டாம் மனைவி நாச்சியாருக்கு கொடுக்க போவதாக வந்த தகவலை அறிந்து அழகிய நம்பி, ராமர் பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பண்ணையார்க்கும் நாச்சியாரின் சகோதரருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாச்சியாரின் சகோதரர் பண்ணையாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த படுகாயமடைந்த பண்ணையார், ரத்தம் சொட்ட சொட்ட அவரது உறவினர்களுடன் சேர்ந்து நாச்சியாரின் சகோதரரை முகத்தை மூடி கல்லால் பலமாக அடித்துள்ளார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதில் பண்ணையார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாச்சியாரின் சகோதரர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் தென்காசி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண்ணையாரை நாச்சியாரின் சகோதரர் அரிவாளால் வெட்ட வந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story