பாலஸ்தீனத்தில் தாக்குதல் - சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்.

பாலஸ்தீனத்தில் தாக்குதல் - சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்.
X
இஸ்ரேலுக்கு எதிராக சங்கரன்கோவில் போராட்டம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் சமூகஇடைவெளியில் மற்றும் முககவசம் அணிந்து நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்னறால் முதலில் ரமலான் தொழுகை வீட்டில் இருந்து நடத்தியது போல அவரவர் வீட்டில் இருந்து தான் போரட்டம் நடத்த திட்டமாம். அப்புறம் அது யாருக்கு தெரியப்போகுது அப்படின்னு பலர் வீட்டில் இருந்தும் சிலர் வீதியில் நின்றும் போராட்டம் நடத்தினாங்களாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!