கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூடைகளால் பரபரப்பு...

கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூடைகளால் பரபரப்பு...
X
சங்கரன்கோவில் நகரின் மையப்பகுதியில்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் நகர் ௧ ம் தெருவில் முழுவதும் கிடந்த ரேஷன் அரிசி மூடைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 12 மூடைகளுக்கு மேல் 500 கிலோ வரையிலான மூடைகளை ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் விட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏழை மக்களுக்காக அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி இவ்வாறு நடுரோட்டில் கிடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் விட்டுச் சென்று இருக்கலாமா அல்லது வேறு யாரேனும் போட்டு சென்றனரா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நடுரோட்டில் கிடந்த ரேஷன் அரிசி மூடைகளை சங்கரன்கோவில் காவல் நிலைய அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

சங்கரன்கோவிலில் நாளுக்கு நாள் ரேஷன் அரிசியை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Tags

Next Story