பள்ளி சிறுமியிடம் காதல் வேடம்: இளைஞர் போக்சோவில் கைது

X
By - S. Esakki Raj, Reporter |21 Feb 2021 11:55 PM IST
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் முத்துமணி என்ற நபர் அச்சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளால் பேசி, சிறுமியின் பள்ளிக்கு எதிரே உள்ள சந்திக்கு அழைத்து வந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மங்கயர்கரசி விசாரணை மேற்கொண்டு மேற்படி நபரான மாரி கார்த்திகேயன் என்பவரின் மகன் முத்துமணி (19) என்ற நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu