அம்மா மினி கிளினிக்-அமைச்சர் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமம், வையக்கவுண்டன்பட்டி கிராமம், செவல்குளம் கிராமம், பனவடலிசத்திரம் கிராமம், சின்னகோவிலான்குளம் கிராமம், நடுவக்குறிச்சி கிராமம், கக்கன் நகர் ஆகிய இடங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்து தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம புறங்களில் 41 அம்மா மினி கிளினிக்குகள் அமையவுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் கிராம புற பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். நகரபகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் செயல்படும். அம்மா மினிகிளினிக்கை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu