போலீசார் அடித்ததாக பக்தர்கள் சாலை மறியல்

போலீசார் அடித்ததாக பக்தர்கள் சாலை மறியல்
X

சங்கரன்கோவிலில் கோவில் திருவிழா ஊர்வலத்தில் போலீசார் அடித்ததாக கூறி பக்தர்கள் சாலை மறியல் செய்தனர் .

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற சாமி அழைப்பு ஊர்வலத்தில் போலீசார் அடித்ததாக கூறி ஊர்வலமாக சென்றவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு உள்ள திருநெல்வேலி ராஜபாளையம் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோவில் திருவிழாவில் அடுத்தடுத்து நிகழ்ச்சி இருந்ததால் ஊர்வலகாரர்கள் சமாதானமாகி கோவிலுக்கு சென்றனர்.அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!