சங்கரன்கோவிலில் விபத்தில் சிக்கும் கனரக வாகனங்கள்

சங்கரன்கோவிலில் விபத்தில் சிக்கும் கனரக வாகனங்கள்
X

சங்கரன்கோவிலில் தொடர்ந்து விபத்துக்களில் கனரக வாகனங்கள் சிக்கி வருகிறது. இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருவேங்கடம், சங்கரன்கோவில், ராஜபாளையம் திருநெல்வேலி இணையும் சாலை உள்ளது. இங்கு குடிநீருக்காக குழிகள் தோண்டப்பட்டு அதை சரியாக மூடாததால் நான்கு முக்கிய சாலையில் அவ்வப்போது கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வதும் அதை போக்குவரத்து காவலர்கள் சீர் செய்வதும் சில நேரத்தில் அவர்களே களத்தில் இறங்கி வாகனங்களை தள்ளி விடுவதும் சில நேரங்களில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

நேற்று இரவு இரண்டு வாகனங்கள் அதே இடத்தில் குழிக்குள் சிக்கி தவித்து வந்த நிலையில் விடிய விடிய நின்று 7 வாகனங்களையும் வெளியே எடுத்து அப்புறப்படுத்தினர். அடுத்ததாக இன்று காலையிலும் போக்குவரத்து நெருக்கடியான நேரத்திலும் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே சங்கரன்கோவில் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business