விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்கள் வரலாறு காணாத நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 300 விசைத்தறி உரிமையாளர்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விரைவில் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 5 தொழிற்சங்க கூட்டமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!