குற்றாலத்தில் முழு நேரமும் குளிக்க விரைவில் அனுமதி: மாவட்ட ஆட்சியர்

குற்றாலத்தில் முழு நேரமும் குளிக்க விரைவில் அனுமதி: மாவட்ட ஆட்சியர்
X

பைல் படம்.

குற்றால அருவிகளில் முழு நேரம் குளிப்பதற்கான அனுமதி அதிகாரிகளுடன் கலந்தாய்வுசெய்து வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளது.

கொரோனா கட்டுபாட்டால் காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இருந்து வரும் நிலையில், தமிழக அரசு கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கியதால் அருவிகளில் முழு நேரம் குளிப்பதற்கான அனுமதி அதிகாரிகளுடன் கலந்தாய்வுசெய்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!