தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணம் கேட்டு திருநங்கைகள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணம் கேட்டு திருநங்கைகள் மனு அளித்தனர்.
X

தென்காசி மாவட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். நாங்கள் கும்மி பாட்டு, கரகாட்டம், கணியான் கூத்து, உள்ளிட்ட கிராமிய கலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகிறோம்.

ஆனால் கடந்த சில மாதங்களாக எவ்வித திருவிழாக்களும் நடைபெறாமல் இருப்பதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஆண்டு அரசு சமூக நலத்துறை சார்பில் தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்தது. அதேபோல் இந்த ஆண்டும் தங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை செய்து தர வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை அனைத்து திருநங்கைகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் தெரிவித்தனர் .

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil