வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை.
தென்காசிமாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி கோவிட்19 தளர்வுகளற்ற ஊரடங்கு காலமாகிய 24.05.2021 முதல் நேற்று வரை தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நிலையம் செயல்படுத்தப்பட்டது.
இவற்றில் தென்காசி மற்றும் சங்ரன்கோவில் உழவர் சந்தைகளின் மூலம் 9 வாகனங்களும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர்நிறுவனங்கள் மூலம் 12 வாகனங்களும் இயக்கப்பட்டன. மொத்தமுள்ள 21 வாகனங்கள் மூலம் ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான 192 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரைப்படி வட்டார அளவில் வேளாண்வணிகத்துறை தோட்டக்கலைத்துறை ஊராட்சி மற்றும் நகராட்சித்துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு விற்பனை விலை கண்காணிக்கப்பட்டது.
மேலும் உழவர் சந்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக உள்ளூர் காய்கறிகள் கொள்முதல் செய்துஉடனுக்குடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.வேளாண்மை வணிகத்துறை மூலம் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான புகார் கேட்பு மையம் அமைத்து இதன் மூலம் பெறப்பட்ட புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்லதொரு தொடர்பை ஏற்ப்படுத்தி விளைபொருட்களை தங்குதடையின்றி சந்தைப்படுத்தி பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது வேளாண்மை வணிகத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம்.வாகனங்களுக்கு ஈ பாஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகவலை தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குநர் திரு.க.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
#vegetables #fruit #instanews #Tamilnadu #Agri-Commerce #DepartmentofAgricultural #Agricultural #sales #profit #farmers #farmer #veggie #agri #happy #Instanews
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu