தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம்
X
தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தென்காசி கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. மேலும் தற்பொழுது புதியவகை ஓமிக்ரான் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் 15வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை செலுத்தாதவர்களும், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும், அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்