/* */

புளியரை அருகே இளைஞர் அடித்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை

புளியரை அருகே இளைஞர் அடித்துக் கொலையா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

புளியரை அருகே இளைஞர் அடித்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை
X

கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர். 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ளது கட்டளை குடியிருப்பு. இந்த பகுதியைச் சார்ந்தவர் கோமுக்காரையாளர் இவரது மூன்றாவது மகன் ஐயப்பன் இவருக்கு திருமணம் ஆகி சுமதி என்கின்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது மனைவி சுமதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில்வேவில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் ஐயப்பன் மற்றும் அவரது தாயாருடன் கட்டளை குடியிருப்பில் வசித்து வருகிறார்.கூப்பிட்ட வேலைக்குச் செல்லும் ஐயப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு ஐயப்பன் வீட்டிற்கு செல்லாமல் எங்கேயோ போய்விட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கட்டளை குடியிருப்பில் உள்ள தனியார் குடை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இடுகாட்டிற்கு செல்லும் வழியில் நிர்வாணமான நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து புளியரை போலீசார் மற்றும் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்து, நிர்வாண நிலையில் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. அவரது உடலில் பல பகுதிகளில் பலத்த காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்திற்கு தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் .

இந்த கொலை எதனால் நடந்தது யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு நபர் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்துதான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஐயப்பனின் நண்பர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 March 2023 8:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்