சொக்கம்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

சொக்கம்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
X

பைல் படம்.

சொக்கம்பட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காந்தி திருமண மண்டபம். இந்த மண்டபத்தின் எதிரில் சுப்பையா பாண்டியன் என்பவர் கடந்த 20 ம் தேதி அவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணமானல் போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் சுப்பையா பாண்டியன் புகார் அளித்திருந்தார்.

இதேபோல், கடந்த 22 ம் தேதி சொக்கம்பட்டியில் வசித்து வரும் திருமலைக்குமார் மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பலசரக்கு கடைகளின் கதவை உடைத்து உள்ளே இருந்த பணம் திருடி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது சொக்கம்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேசன்(19) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!