பீடி கம்பெனி மூடுவதற்கு தொழிலாளர்கள் கண்டனம்

பீடி கம்பெனி மூடுவதற்கு தொழிலாளர்கள் கண்டனம்
X

செங்கோட்டை அருகே தனியார் பீடி கம்பெனி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடுவதை கண்டித்து பீடி தொழிலாளர்கள் சங்கத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரத்தில் தனியார் பீடி கம்பெனியை சேர்ந்த தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் கண்மணி தலைமையில் நடைபெற்றது.சிஐடியூ தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன், பீடி சங்க மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தனியார் பீடி கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தொழிலாளர் துறை முன் அனுமதி பெறாமல் திடீரென ஏப்ரல் இறுதியில் மூடிட முடிவு செய்வதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிப்பதோடு தமிழக அரசு தொழிலாளர் துறை இதில் தலையிட்டு தொடர்ந்து அய்யாபுரத்தில் பீடி கம்பெனி செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும், 2021 ஏப்ரல் 1 முதல் தமிழக அரசு பீடி தொழிலாளர்களுக்கு உயர்த்திய பஞ்ச படி ரூ. 9.37 பை அனைத்து பீடி கம்பெனிகளும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?