பெண் தவற விட்ட மணி பர்சை விரைவாக கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்

பெண் தவற விட்ட மணி பர்சை விரைவாக கண்டுபிடித்து  ஒப்படைத்த போலீசார்
X

தென்காசி மாவட்டம் புளியரையில் பெண் தவறவிட்ட மணிபர்ஸ் போலீசாரால் உடனடியாக மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பெண் தவறவிட்ட மணி பர்சை போலீசார் உடனடியாக கண்டு பிடித்து அவரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவன் பத்துகளம் பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற பெண் புளியரையில் உள்ள கடைக்கு வந்தபோது அவரது கையில் வைத்திருந்த மணி பர்ஸ் மற்றும் செல்போன் தொலைந்து விட்டதாக புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் தலைமையில் தலைமை காவலர் திருமூர்த்தி, முதல் நிலை காவலர்கள் ராஜேந்திரன்,சுரேஷ்,சாகுல் ஹமீது ஆகியோர் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன மணி பர்ஸ் மற்றும் செல்போனை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

விரைவாக செயல்பட்டு தனது பணம் மற்றும் செல்போனை கண்டுபிடித்து கொடுத்த புளியரை காவல்துறையினருக்கு பகவதி தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!