விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்: விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்

விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்: விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்
X

விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அவ்வப்போது காட்டிய யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் அட்டகாசம் என்பது அதிகரித்து வருகிறது. இதில் வடகரை அருகில் உள்ள நெல் விளாகம் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் தற்போது காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து அங்குள்ள வாழை மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் கூட்டமாக வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தற்போது வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடிகளை வெடித்தும், ஒலி பெருக்கி வாயிலாக அதிக சத்தங்களை எழுப்பியும் காட்டு யானையை விளை நிலத்தில் விரட்டி வருகின்றனர்.

மேலும் காட்டு யானைகளை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில், பாதுகாப்பு கருதியும் வடகரை பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்