காட்டுப் பன்றி வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிப்பு

காட்டுப்பன்றி வேட்டையாடி பிடிபட்டவர்களுடன், வனத்துறையினர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வனச்சரகம், அச்சன்புதூர் அருகே மேக்கரரை பிரிவு வெள்ளக்கல் தேரி பீட் எல்லைக்குட்பட்ட செந்நாப்பொத்தை பரம்பு பகுதியில், வனத்துறையினர் ரோந்து சென்றனர். காலை 6 மணி அளவில் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வானவர் அம்பலவாணன், கடையநல்லூர் பிரிவு வனவர் லூமிக்ஸ் , சிறப்புபணி வனவர் செல்லத்துரை, வனக் காப்பாளர்கள் ராஜா,ராமச்சந்திரன், சுரேஷ், ஆனந்த், வனக்காவலர் ஆறுமுகம் ,வேட்டை தடுப்பு காவலர்கள் சுப்புராஜ், ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் டார்ச்லைட், வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிந்த பார்வதிபுரத்தைச் சேர்ந்த புவனேஷ் குமார்(22) அச்சன்புதூரை சேர்ந்த பக்ருதீன்(21) 17 வயது சிறுவன், காசி தர்மத்தை சேர்ந்த சாமிபாண்டியன்(22) ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்ததில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து வேட்டையாடிய காட்டுப்பன்றி, டார்ச் லைட், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி கடையநல்லூர் வனத்துறையினர், வன வழக்கு பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் டாக்டர் முருகனின் உத்தரவுப்படி, 4 பேருக்கும் ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பினர்.
தப்பியோடி தலைமறைவான பார்வதிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்(22), திருமலைக்குமார் மகன் கருத்தப்பாண்டி(21), கரிசல் குடியிருப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(22), காசிதர்மத்தைச் சேர்ந்த சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முகின் குமார்(21), தமிழன் மகன் வெங்கடேஷ்(23) ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu