பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்!

பாசனத்திற்காக  அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்!
X
பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த தென்காசி மாவட்ட ஆட்சியர்!

பட விளக்கம்: அட்வி நயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தண்ணீரை திறந்து வைத்த போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அடவி நைனார் கோவில் நீர்த்தேக்கம். இங்கிருந்து ஆண்டுதோறும் ஆர் மற்றும் பிசான சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இந்தாண்டு பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

இதன் மூலம் சுரண்டை , வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, குத்துக்கல்வலசை, இலத்தூா், அச்சன்புதூா், நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாரகரம், கிளாங்காடு, ஆய்க்குடி, கம்பளி, சாம்பவா் வடகரை உள்ளிட்ட 16 கிராமங்கள் பயன் பெறும். வியாழன் முதல் 16.03.2024 வரை 150 நாள்களுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் மொத்தம் 955.39 மி. கனஅடிக்கு மிகாமல் நீா் இருப்பை பொருத்து தண்ணீா் திறந்து விடப்படும்.எதிா்வரும் நாள்களில் வடகிழக்கு பருவ மழையினால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பருவமழை பொய்த்து எதிா்பாா்த்த நீா்வரத்து கிடைக்கப் பெறவில்லையென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமையும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்றாா் அவா்.செயற்பொறியாளா் (நீா் வள ஆதாரத் துறை) அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி பொறியாளா் பாலசுப்பிரமணியன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் முருகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஜாகீா் உசேன்,சமூக ஆா்வலா் ரஹ்மத்துல்லா, விவசாய சங்க நிா்வாகிகள் முகம்மது இஸ்மாயில், வாவா மைதீன், மன்சூா், தங்கம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil