தென்காசி அருகே பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.க.வினர்

தென்காசி அருகே பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.க.வினர்
X

வடகரை பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

தென்காசி அருகே வடகரை பேரூராட்சி அலுவலகத்தை வி.சி.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வடகரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர்.அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், வடகரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வாவாநகரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொடிக்கம்பம் ஒன்று நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த கொடிக் கம்பமானது அருகாமையில் உள்ள இடத்திற்கு செல்வதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, அந்த இடத்தின் உரிமையாளர் வடகரை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனை தொடர்ந்து விரைந்து வந்த பேரூராட்சி ஊழியர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை அகற்றி கொடிக்கம்பத்தை பேரூராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகரை பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலில், வடகரை பேரூராட்சி அலுவலகம் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


மேலும், மற்ற கட்சியினரின் கொடிக்கம்பம் அதே பகுதியில் இருக்கும்பொழுது, அதை அகற்றாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை அகற்றியது ஏன் எனக்கேட்டு, வி.சி.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தைநடத்தினர்.

ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு