வாஞ்சிநாதன் 111வது நினைவு தினம்: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வாஞ்சிநாதன் 111வது நினைவு தினம்: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

வாஞ்சிநாதன் திருவுருவச்சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 111 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை.

செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 111 வது ஆண்டு நினைவு தினம் - திருவுருவச்சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன். 1886 -ம் ஆண்டு பிறந்த இவர். கடந்த 17.06.1911-ம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டு கொன்று விட்டு, தானும் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டவர் வீரவாஞ்சிநாதன். அவருக்கு மரியாதை செய்கின்ற வகையில் செங்கோட்டை முத்துசாமி கரையாளர் பூங்கா வளாகத்திற்குள் நினைவு மாளிகை கட்டப்பட்டு வீர வாஞ்சிநாதனின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று அவரது 111 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கல சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இளவரசி, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் பார்கவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!