கடையநல்லூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 350 பேர் மீது வழக்குப் பதிவு

கடையநல்லூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்:  350 பேர் மீது வழக்குப் பதிவு
X
கடையநல்லூரில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 350 நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திரிபுராவில் விஷ்வ இந்து பரிசத் திட்டமிட்டு கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை கொரானொ ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், மாநில செயலாளர்கள் செய்யது அலி , செங்கை முஹம்மது பைசல் ,மாவட்ட செயலாளர் அப்துல் பாஷித், மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன்,துணைத்தலைவர் செய்யது மசூது சாகிபு, மாவட்ட துணை செயலாளர்கள் அஹமத், ஹாஜா முகைதீன், பீர் முஹம்மது,செய்யது அன்வர் சாதிக்,மாவட்ட தொண்டரனி செயலாளர் முஹம்மது புஹாரி மற்றும் 150 பெண்கள் உட்பட 350 நபர்கள் மீது கடையநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

Tags

Next Story