நகராட்சி அலுவலகம் அருகே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்

நகராட்சி அலுவலகம் அருகே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்
X

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்.

செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர் வெட்டி படுகொலை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்

ராஜேஷ்

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து மற்றும் நாங்குநேரி பகுதியில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக மந்திரமூர்த்தி மற்றும் மாரி ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குளிக்க சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட ராஜேஷ் என்பவருக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது

இதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு 8 தையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்த பணியாளர்கள் காவல் நிலையத்தில் எவ்வித புகார் கொடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த போது டிப் டாப்பாக வந்த மர்ம கும்பல் ஒன்று நகராட்சி அலுவலக வாயில் முன்பு வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

ராஜேஷை காத்திருந்து கொலை செய்துவிட்டு ஒப்பந்த ஊழியர்கள் தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மந்திரமூர்த்தி மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் வேற யாருக்கும் தொடர்பு உள்ளதா? வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது உயிரிழந்த ராஜேஷின் உடலை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ராஜேஷின் உறவினர்கள் தற்போது திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவரும் நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சாலை மறியலில் ஈடுபட்டு வரும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!