கடையநல்லூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

கடையநல்லூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X

கைப்பற்றப்பட்ட டூவீலர்கள்.

கடையநல்லூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக சார்பு ஆய்வாளர் குட்டிராஜா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜின்னா என்பவரின் மகன் அக்பர் மற்றும் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த சித்திக் என்பவரின் மகன் ஷேக் அலி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மேற்படி இரண்டு நபர்களையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!