செங்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மாேதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

செங்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மாேதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
X

செங்காேட்டை அருகே விபத்து நடந்த இடத்தில் பாேலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரழப்பு.

தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரழப்பு புளியரை போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கட்டளை குடியிருப்பு அருகே இருசக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் (20), சம்பவ இடத்திலும், புளியரை சேர்ந்த சதாசிவம் (22) மற்றும் சுரேஷ்குமார்(19) ஆகிய இரண்டு நபர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

மேலும் கார்த்திக் (23) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!